ஹோண்டா எஸ்பி 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 மாடல்களின் அசரடிக்கும் சிறப்பம்சங்கள். ஒப்பிட்டு பார்த்து ஊரடங்கு முடிந்ததும் ஊரை சுற்ற வாங்கிக்கொள்ளுங்கள்.
டிஸைன் :
பல்சர் 125ஆனது பல்சர் 150 மாடலின் வடிவத்தை ஒற்றி அதே ஸ்டைலில் மிக நேர்த்தியாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் அமைந்துள்ளது.
எஸ்பி 125 மாடலானது அசத்தலான டேங்க், அருமையான முன்புறம் போன்ற அம்சங்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
என்ஜின்
இரண்டு மாடல்களும் 125சிசி என்ஜினை பெற்றுள்ளது. மேலும் தரபோதையா பிஎஸ் 6 முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பல்சர் 125 மாடல் எலக்ட்ரானிக் கார்புரேட்டர் முறையில் அமைந்துள்ளது. அதே வேளையில், எஸ்பி 125 பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் வழங்கப்பட்டிருப்பது இந்த மாடல் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க செய்துள்ளது.
125 சிசி மாடலில் அதிகபட்ச பவரை தொடர்ந்து பஜாஜ் பல்சர் 125 வழங்குகின்றது. அதிகபட்சமாக 11.8hp பவரை வழங்குகின்றது. ஹோண்டா எஸ்பி 125 மாடலானது 10.72hp பவரை வெளிப்படுத்துகின்றது. அடுத்து, எஸ்பி 125 மாடல் 10.9 என்எம் டார்க் திறனையும், பஜாஜ் பல்சரின் 125 மாடலானது 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றது.
பல்சர் 125 மாடல் சராசரியாக 55 கிமீ மைலேஜும், எஸ்பி 125 மாடலானது சராசரியாக 58 கிமீ முதல் 60 கிமீ மைலேஜும் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளது. எடைக் குறைந்த மாடலாக எஸ்பி 125-ஆனது 118 கிலோ எடையும், பல்சர் 125 140 கிலோ எடையும கொண்டுள்ளது.
வசதிகள்
இரு மாடலில் பிரேக்கிங் திறனில் இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொண்டிருக்கிறது. இருப்பினும், பல்சரில் 170 மிமீ முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 130 மிமீ அளவும், எஸ்பி125-ல் முன்புறத்திலும் 130மிமீ மட்டும் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பொறுத்தவரை இரு பைக்குகளும் 240 மிமீ டிஸ்க்கினை ஆப்சனில் தருகிறது. இரு மாடல்களிலும் சிபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளது.
சிறப்பம்சங்கள்
ஹோண்டா எஸ்பி 125 எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கருவி கிளஸ்ட்டரில் நிகழ்நேர எரிபொருள் செயல்திறன், பெட்ரோல் இருப்பிற்கான தூரம், கியர் நிலை என பலவற்றை கொண்டுள்ளதாக இருக்கிறது. ஆனால், பல்சர் 125 மாடலில் ஹாலஜென் விளக்குகளும் செமி டிஜிட்டல் கிளஸ்ட்டரையும் மட்டுமே இருக்கிறது.
விலை :
ஹோண்டா எஸ்பி 125 – ரூ.76,224 (டிரம் பிரேக்), ரூ.80,424 (டிஸ்க் பிரேக்)
பல்சர் 125 விலை – ரூ.72,941 (டிரம்பிரேக்), ரூ.77,062 (டிஸ்க் பிரேக் )
மேற்கண்ட விலைப்பட்டியல் சென்னை எக்ஸ்ஷோரூம் விலைபட்டியல் ஆகும்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…