இந்தியாவில் வெளியானது ஹோண்டா ஹைனெஸ் சிபி 350.. விலை என்ன தெரியுமா?

Default Image

ஹோண்டா நிறுவனம், தனது புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா, ஜாவா 42, பெனெல்லி இம்பீரியல் 400 போன்றவற்றுக்கு பயங்கர போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்கள்:

டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் வெளியான இந்த பைக், ரெட்ரோ-ஸ்டைல் டிசைன், வட்ட வடிவ ஹெட்லேம்ப், அகலமான ஹேண்டில்பார், டியர்-டிராப் வடிவ பெட்ரோல் டேன்க், ஒற்றை இருக்கை மற்றும் சாப்டு பென்டர்களை போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

என்ஜின்:

ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹைனெஸ் சிபி 350 பைக்கில் 348.36சிசி லாங்-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 20.8 பிஹெச்பி பவரும், 3000 ஆர்பிஎம்-ல் 30NM டார்க் வெளியாகிறது. அதனை இயக்க 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதில் அசிஸ்ட் உடன் கூடிய சிலிப்பர் கிளட்ச் வசதியும் வருகிறது.

இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்:

இந்த ஹோண்டா ஹைனெஸ் சிபி 350-ல் அனலாக் ஸ்பீடோமீட்டர் வசதியுடைய சிறிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன் கன்சோல், ப்ளூடூத் வசதி கொண்டுள்ளது. மேலும் நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், போன் கால் மற்றும் மெசேஜ்களை வாய்ஸ் அசிஸ்டிவ் (குரல் மூலமாக) இயக்க முடியும். இந்த வாய்ஸ் அசிஸ்டிவ், பிரீமியம் DLX ப்ரோ வேரியண்டில் மட்டும் உண்டு.

ஹெட்லம்ப் மற்றும் இண்டிகேட்டர்:

இந்த வண்டியின் அழகை கூட்டுவது, அதன் வட்ட வடிவத்திலான ஹெட்லம்ப். இதில் எல்இடி லைட் பொருத்தப்பட்டுள்ளது. டெயில் லேம்ப், ரிங்-ஸ்டைல் இன்டிகேட்டர்கள், டேங்க் டிசைன், வட்ட வடிவத்திலான ரியர் வியூ மிரர் இதனை மேலும் அழகாக காட்டுகிறது.

டயர் மற்றும் பிரேக்:

ஹைனெஸ் சிபி 350-ல் முன்புற டயரில் 310 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் வசதி உண்டு. இதில் டூயல் சேனல் எபிஎஸ் பிரேக் வசதியும் உள்ளது. மேலும், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் வசதியுடன் வருகிறது.

விலை:

இந்த புதிய ஹைனெஸ் சிபி 350 பைக்கின் விலை ரூ.1.85 லட்சத்தில் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) துவங்குகின்றது.

ஹைனெஸ் சிபி 350 DLX:ரூ. 1.85 லட்சம்

ஹைனெஸ் சிபி 350 DLX ப்ரோ: ரூ. 1.90 லட்சமாகும்.

இதன் பிரீமியம் DLX ப்ரோ வேரியண்டில் டூயல் டோன் மற்றும் ஸ்மார்ட் வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மட்டும் கூடுதலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்