200 சிசி மாடல்களுக்கு சரியான போட்டியாக விரைவில் களம் காணும் ஹோண்டா சி.பி.எஃப்190 ஆர்.!

Default Image

ஹோண்டா CBF190R மற்றும் ஹோண்டா CBF190 X மாடல்களின் அசத்தல் சிறப்பம்சங்கள் இதோ…

இந்தியாவில் தற்போது களத்தில் உள்ள 200சிசி மாடல் பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா CBF190R ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா முயன்று வருகிறது.

சீனாவில் களமிறங்கிய சி.பி.எஃப் 190 எக்ஸ் அட்வென்ச்சர் மாடலை அடிப்படையாக கொண்டு சிபிஎஃப் 190 ஆர் பைக் இந்தியாவில் களமிறங்க, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த மாடலில் 184cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 16 ஹெச்பி பவர் மற்றும் 15 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்டைலான அம்சங்களாக இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், டைல் லைட் என மிக நேர்த்தியாக பாடி கிராபிக்ஸ் உள்ளது. டிஜிட்டல் கிளஸ்ட்டரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹீரோ, பஜாஜ் பல்சர் 200, டிவிஎஸ் அப்பாச்சி ஆகியவைகளின் 200 சிசி மாடல்களை எதிர்கொள்ள சரியான போட்டியாக ஹோண்டா CBF190R மற்றும் ஹோண்டா CBF190 X போன்றவை விரைவில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்