ஹோண்டா CB350 RS வெளியீடு, விலை, அம்சங்களின் விவரங்கள்..!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தனது புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் புதிய ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.1,96,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது சிபி 350 ஐ விட சுமார் 10 ஆயிரம் ரூபாய் அதிகம் என கூறப்படுகிறது. புதிய ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் பிளாக் மற்றும் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் கலரில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. நீண்ட தூர பயணங்களில் கூட, பைக் ஓட்டும் நபருக்கும், அதில் அமர்ந்திருக்கும் நபருக்கும் ஏற்றவாறு பைக் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் 350சிசி, ஏர்-கூல்டு 4 ஸ்டிரோக் OHC சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஹோண்டா சிபி 350 இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025