ஓரினச்சேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள் என கோவாவில் போப் பிரான்சிஸ் பேசியுள்ளார்.
ஓரினச் சேர்க்கை என்றாலே பலரும் அருவருக்கத்தக்க விடயமாக இந்தியாவில் காணப்படுகிறது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் குடும்ப வாழ்வில் இணைவது என்பது முடியாது என்று இந்தியர்களால் கூறப்பட்டு மறுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இது சிலரால் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் படுகிறது. ஆனால் பல நாடுகளில் இதற்கு தற்போது ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தாலியின் ரோம் நகரில் இன்று நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துகொண்ட போப் பிரான்சிஸ் அவர்கள் முன்னிலையில் பிரான்சிஸ்கோ என்ற பெயரில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களால் தத்தெடுக்கப்பட்ட மூன்று குழந்தைகள் அவர்களுடன் தேவாலயத்திற்கு வருவது போன்றும் அவர்களைப் போப் உற்சாகப்படுத்துவது போன்றும் படமாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதன் பிறகு அவ்விழாவில் பேசிய போப் பிரான்சிஸ் அவர்கள், ஓரினச்சேர்க்கையாளர் குறித்து பேசிய போது, ஓரினச் சேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள் எனவும், அவர்கள் ஒரே குடும்பமாக வாழ சட்ட திருத்தம் தேவை எனவும் கூறியுள்ளார். ஓரினச்சேர்க்கையை சில நாடுகளே அதிகரித்து வருகின்ற நிலையில் பல நாடுகள் எதிர்க்கத்தான் செய்கின்றனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ் இவ்வாறு பேசியுள்ளது பல்வேறு இடங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…