ஓரினசேர்கையில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இளம்பெண்கள்.! மண்டபம் தர மறுத்த உரிமையாளர்.! காரணம் இதுவா.?

Default Image
  • தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மேகன் வால்டிங் 25 வயதும், மற்றும் லீ ஹீகீஸ் 24 வயதும் உடைய ஓர்பால் ஈர்ப்பாளர்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
  • மண்டபத்தின் உரிமையாளர் ஓர்பால் ஈர்ப்பாளர்கள் என்பதற்காக திருமண மண்டபத்தை தர மறுத்துள்ளார். அதற்கு காரணமாக, ஓர்பால் ஈர்ப்புத் திருமணம் கிறிஸ்துவ நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

ஒரே பாலினத்தை சேர்ந்த இரு பெண்ணும், இரு ஆண்ணும் காதலித்து ஒன்றாக திருமணம் செய்துகொள்வது வெளிநாடுகளில் பல இடங்களில் அவ்வப்போது நடந்து வந்தது. இது தற்போது இந்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் ஓரின சேர்க்கை திருமணம் வடமாநிலங்களில் ஒரு சில இடங்களில் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு இந்த ஓரின சேர்க்கை திருமணம் கேரளாவில் நடந்திருக்கிறது என குறிப்பிடப்படுகிறது. அதனை சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் எனக்கென என்று கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

இரண்டு ஆண்களுக்கும் திருமணம்.! வைரலாகும் கேரள ஓரினசேர்க்கையாளர்கள் புகைப்படம்.!

இந்நிலையில், அதுபோன்று தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மேகன் வால்டிங் 25 வயதும், மற்றும் சாஷா-லீ ஹீக்ஸ் 24 வயதும் உடைய ஓர்பால் ஈர்ப்பாளர்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். திருமண மண்டபத்துக்காக அதன் உரிமையாளரை அணுகியுள்ளனர். ஆனால், மண்டபத்தின் உரிமையாளர் ஓர்பால் ஈர்ப்பாளர்கள் என்பதற்காக திருமண மண்டபத்தை தர மறுத்துள்ளார். அதற்கு காரணமாக, ஓர்பால் ஈர்ப்புத் திருமணம் கிறிஸ்துவ நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள மேகன் வால்டிங் வால்டிங்கின் பதிவில், நான் காயப்படுத்தப்பட்டதை நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்கள். உங்களுடைய இந்த செயல்களால் நான் எவ்வளவு வேதனையடைந்திருப்பேன். அடுத்த ஆண்டுக்குள் நாங்கள் விரும்பும்படி திருமண மண்டபம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆப்பிரிக்கா கண்டத்திலேயே தென்ஆப்பிரிக்காவில் மட்டும்தான் ஓர்பால் ஈர்ப்புத் திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையம், திருமண மண்டபத்தின் உரிமையாளரின் செயல் பாகுபாடு நிறைந்தது என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்