நடிகர் விமலின் சொந்த ஊரான மணப்பாறையில் உள்ள ஊர் மக்கள், அங்குள்ள மேடையை பொக்லைன் இயந்திரம் மூலம் மர்ம நபர்கள் இடித்ததன் பெயரில் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விமல். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், தற்போது படவாய்ப்புகள் சற்று குறைவாகவே வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விமலின் சொந்த ஊரான மணப்பாறை அருகே விமலின் பூர்வீக வீடு ஒன்று இருக்கிறது. இவரது வீட்டிற்கு எதிரில் இருக்கக்கூடிய காலியான மைதானத்தில் விளக்குத்தூண் ஒன்று அமைத்து அங்கு விளக்கு ஏற்றி அந்த ஊர் மக்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் இந்த விளக்கு துணை சுற்றி சிறிய மேடை ஒன்றையும் ஊர்க்காரர்கள் அமைத்து இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஊர்க்காரர்களால் கட்டப்பட்டு இருந்த விளக்குத்தூண் மற்றும் மேடையை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளி நாசம் செய்துள்ளனர். இதனால் விமல் குடும்பத்தினர் மீது சந்தேகம் அடைந்த அந்த ஊரை சேர்ந்த கோவில் பூசாரி செல்வம் அவர்கள், ஊர் மக்களுடன் சேர்ந்து போலீசில் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக தற்பொழுது மணப்பாறை டிஎஸ்பி விமல் மீது விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…