வீட்டை கோவிலாகவும் குடும்பத்தை சந்தோஷமாகவும் வைத்திருக்கும் சக்தி தான் நம் வீட்டு மகாலட்சுமிகள்!

Default Image
  • ஒரு வீடானது ஒரு பெண் இருந்தால் மட்டுமே அது குடும்பமாக பார்க்கப்படுகிறது.
  • வீட்டிலிருக்கும் பெண் தான் நம் வீட்டு மகாலட்சுமி. அவள் எப்படி இருக்கிறாளோ அப்படியே குடும்பமும் இருக்கும்.

பெண்கள் என்றாலே தனி சிறப்புதான். நம் வீட்டின் நடமாடும் மகாலட்சுமி நம் வீட்டு பெண்கள்தான். அதனால்தான் முன்னோர்கள் வீட்டு குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் குடும்பத் தலைவியிடமே ஒப்படைப்பார்கள். பல சிறப்புகள் பெண்ணிற்கு உண்டு. ஒரு பெண் வீட்டில் எப்படி இருக்கிறாளோ அப்படித்தான் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமையும்.

அப்படிப்பட்ட நம் வீட்டு மகாலட்சுமிஎப்படி இருக்க வேண்டும் என் முன்னோர்கள் கூறுகிறாரகள் என இப்போது பார்க்கலாம். காலை முதல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அந்த சுறுசுறுப்பு தான் வீட்டில் உள்ள அனைவரையும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். அவர்கள் என்றைக்கும் எதிர்மறையான சொற்களை குடும்பத்தாரிடம் கூறக்கூடாது. எப்போதும் நேர்மறை எண்ணங்களை பேசி குடும்பத்தாரை உற்சாகப்படுத்த வேண்டும். இதனால் குடும்பத்தாருக்கும் புத்துணர்ச்சி ஏற்படும். அன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

காலை எழுந்தவுடன் குளித்து விட்டு சுத்தமான நல்ல ஆடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ பெண்கள் உடுத்தும் ஆடை கூட முக்கிய காரணமாக அமையும். காலையிலும் மாலையிலும் இறைவனை வழிபட வேண்டும். இது மிகவும் நல்லது. பெண்களின் பேச்சு மற்றவர்களை மதிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். அப்போதுதான் வீட்டு குடும்ப பிரச்சனைகள் கூட அவர்களால் எளிய முறையில் தீர்த்து வைக்க கூடும்.

குடும்பத்தில் பிரச்சினை வந்தாலும் அதனை சுலபமாக தீர்த்து விடுவார்கள். அந்த திறமை அவரிடம் நிறையவே உள்ளது. அவர்கள் பேச்சிலும் எண்ணத்திலும் நேர்மறையான எண்ணங்கள் வேண்டும் என முன்னோர்கள் கூறி வருகின்றனர். பெண்கள் எப்போதும் நிதானத்தை கடை பிடிப்பவர்கள் அதனால்தான் குடும்ப பொறுப்புகளை அவர்களிடம் முன்னோர்கள் ஒப்படைத்தனர்.  பெண்கள் வீட்டைப்போல மனதையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் வீட்டின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் நகை என்றால் அது அவர்களின் புன்னகை தான். எப்போதும் முகத்தில் புன்சிரிப்பு டன் இருந்தால் வீட்டில் பெரியவர்கள் எவ்வளவு பிரச்சனைகளோடு இருந்தாலும் வீட்டு மகாலட்சுமி சிரிப்பை கண்டு அந்த கஷ்டத்தை மறந்து புத்துணர்வுடன் தனது அடுத்த நகர்வை முன்னெடுத்து வைப்பார்கள். அப்படிப்பட்ட வீட்டில் கஷ்டம் என்பது நிரந்தரமாக இருக்கவே இருக்காது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்