விமரிசையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை குறித்த புராண வரலாறு… உங்களுக்காக…

Default Image

இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை குறித்த புராண வரலாறுகள்:

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவின்  பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணுகிறான். எனவே அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக வண்ணப் பொடிகளை பூசி மகிழ்கிறான்.

 

Image result for ராதா கிருஷ்ணா ஹோலி

கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள்.இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது மனைவி பிரியமாக இருக்கிறாள் என்று இன்றளவும் மகிழ்கின்றனர்.

பிரகலாதன் குறித்த புராண வரலாறு:

பரந்தாமன் பக்தனான பிரகலாதனையும் அவரது தந்தை இரண்யகசிபுவையும் அனைவரும் அறிவோம். சர்வ வல்லமை பொருந்திய சிவ நாமத்தை அழைக்காமல், ஹரியின் நாமத்தை தன்  மகன் அழைத்து கொண்டிருக்கிறானே என்று இரண்யகசிபு கடும் கோபம் கொண்டான். விஷம் கொண்ட பாம்புகள் பிரகலாதனை தீண்டியும், மதம் கொண்ட யானைகளால் பிரகலாதனை மிதிக்க வைத்தும் பிரகலாதனுக்கு பாடம் கற்பிக்க விரும்புகிறார் அவரது தந்தை. ஒவ்வொரு நாளும் சிவனை  போற்றி பாடும்படி பிரகலாதனை வற்புறுத்தியும், நாராயணனே முதல் கடவுள்;

Image result for பக்த பிரகலாதன்

அவரது நாமத்தையே உச்சரிப்பேன் என்று பிரகலாதன் மறுத்து வந்தான். இதனால் தன் சகோதரி ஹோலிகாவை அழைத்து, தீயில் தனது மகனை மடியில் அமரவைத்து கொல்லுமாறு இரண்யகசிபு உத்தரவிட்டான்.சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை தன் மடியில் வைத்துக்கொண்டு, மரக்கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. எனினும், நாராயணனின் மந்திரத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. இதனால் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் ஹோலிகா பஸ்பமானாள். பிரகலாதன் சிரித்த முகத்துடன் தீயிலிருந்து வெளியேறினான். இதுவே ஹோலி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என்று புராணங்கள் கூறுகின்றன.

மற்றொரு சிவ வரலாறு :

ஒரு முறை மலைமகளான உமையவள் தந்தை  தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணந்து கொள்ள தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் பரதேசியாக இருக்கும்  உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என்று தட்சன் ஆணவத்துடன் கூறினான்.இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தன்னிலை மறந்து கடும் தவம் புரியத் தொடங்கினார். இதனால்  அகில அண்டத்தின்  இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன.

Image result for சிவன் பார்வதி

தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணத்தை சிவனின் மீது  விடுமாறு கூறினார்.மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார். இதைத் தொடர்ந்து, சொக்கர் மீனாட்சியாகிய உங்கள்   இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி சிவனிடம் வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் வண்ணப்பொடிகளை பூசியும், தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth