உருளைக்கிழங்கு பிரெட் போண்டா செய்முறை.!

பிரெட் போண்டா என்பது நன்கு வறுத்த ரொட்டி ஆகும். இது, மும்பை மற்றும் மத்திய இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவாகும்.
தேவையான பொருட்கள்:
பிரட் – 1 பாக்கெட்
உருளைக்கிழங்கு – 5 பெரிய
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 நறுக்கியது
இஞ்சி – அரைத்தது
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உளுந்தம்பருப்பு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
ஆயில் – 1/4 லிட்டர்
செய்முறை:
முதலில், உருளைக்கிழங்கை நீரில் வேக வைத்து அடுத்தது தோலுரித்து உதிர்த்துக் கொள்ளவும்.மேலும், அதில் உப்புச் சேர்த்து கொள்ளுங்கள். பின் அடுப்பில் வாணலி வைத்து கடுகு, உளுந்தம்பருப்பு தாளிக்கவும், அத்துடன் இஞ்சி கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
அடுத்த உதிர்த்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கி ஆறவிடவும். சூடு ஆறியதும் எலுமிச்சை அளவு உருட்டிக் கொள்ளவும். பிரட் துண்டை எடுத்து தண்ணீரில் நனைத்து உடனே பிழிந்துவிட்டு அதில் மசால் உருண்டையை வைத்து உருட்டி கொள்ளவும்.
உருட்டிய உருண்டைகளை இப்பொது எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பின் புதினா சட்னியுடன் பரிமாறி சுவையாக இருக்கும்.