சர்வாதிகாரி ஹிட்லரின் வளர்ப்பு முதலை உயிரிழந்தது!
ஹிட்லர் வளர்த்த முதலையாக கருதப்படும் முதலை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளது.
சர்வாதிகாரி ஹிட்லர் வளர்த்ததாக கூறப்பட்ட சாற்றன் எனும் முதலை 84 வயதுடையதாம். அந்த முதலை தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டுள்ளது. உலக போருக்கு பின்பு ஹிட்லர் உயிரிழந்ததால் அந்த முதலை ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஹிட்லர் தான் அந்த முதலையை வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது. இருப்பினும் ஹிட்லர் இறந்து தற்பொழுது 75 ஆண்டுகள் ஆகியுள்ளதால், முதலை அவரால் வளர்க்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது. 84 வயதுடைய இந்த முதலை வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளது.