டி20 போட்டியில் கெயிலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தட்டி பறித்த ஹிட் மேன் !
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா 24 ரன்கள் அடித்தார். அதில் 2 சிக்ஸர் அடங்கும்.இதன் மூலம் டி20 போட்டிகளில் 104 சிக்ஸர் அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார்.இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 105 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் இருந்தார்.
இந்நிலையில் நேற்றுநடந்த போட்டியில் ரோஹித் சர்மா 67 ரன்கள் அடித்தார்.அதில் 6 பவுண்டரி , 3 சிக்ஸர் விளாசினார்.தற்போது டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா 107 சிக்ஸர் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
கிறிஸ் கெயில் 105 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும் , நியூஸிலாந்து அணி வீரர் மார்டின் குப்தில் 103 சிக்ஸர்களுடனும் 3 வது இடத்தில் உள்ளார்.