வரலாற்றில் இன்று(19.01.2020)..மகா வித்துவான் சி.தியாகராசர் பிறந்த தினம் இன்று..

Default Image

பிறப்பு:

திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள  பூவாளூர் என்ற கிராமத்தில், கடந்த  1826 ஆம் ஆண்டு  சிதம்பரம் செட்டியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்

பள்ளியும்,படிப்பும்:

தியாகராசர் திண்ணைப் பள்ளி ஒன்றில்  தொடக்கக் கல்வியை  பெற்றார். பின்னர் தனது ஊருக்கு அருகில் வாழ்ந்த தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பின், 1844 ஆம் ஆண்டில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து இலக்கியமும் இலக்கணமும் பயின்றார்.

பணி புரிந்த இடங்கள்:

தமிழிலக்கியத்தில்,  மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து இலக்கியமும் இலக்கணமும் போதிய பயிற்சி பெற்றதும் மீனாட்சி சுந்தரனாரிடமே ஓலை எழுதுவோராகவும் மாணவர்களுக்குத் தொடக்கப் பாடங்களைக் கற்பிக்கும் சட்டாம்பிள்ளையாகவும் பணியாற்றினார். பின் 1865 ஆம் ஆண்டில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளார். பின், அதே கல்லூரியில் உ. வே. சாமிநாதருக்கு  தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தார். பனைவோலை எழுதுவதிலும் இலக்கணத்தைக் கற்பிப்பதிலும் சிறந்த விற்பனராகத் திகழ்ந்தவர்  1888 ஆம் ஆண்டில் இந்த பூ உலகை விட்டு மறைந்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்