பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் பிறந்த தினம் இன்று.
பிரபஞ்சன் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார் . இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார்.
புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 1961ல், இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற இதழில் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார்.
1995ல் இவரது நூலான வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இது ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான முட்டை தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது.
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…