இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிறது.
தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் (National Panchayati Raj Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் நாளன்று இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு தேசிய நாளாகும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள்.
அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…