வரலாற்றில் இன்று(14.01.2020).. தமுஎச எனும் அமைப்பை துவங்கிய முற்போக்கு எழுத்தாளர் பிறந்த தினம் இன்று..
- தமிழக விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், முற்போக்கு எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் எனபல்வேறு பதவிகளை வகித்தவர்,
- இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பல ஆண்டுகள் சிறையிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தவர் கே. முத்தையா ஆவர் இவரை குறித்த சிறப்பு தொகுப்பு,
பிறப்பு:
இவர் தமிழ் நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டம் பேராவூரணி கிராம ஊராட்சிக்குட்பட்ட முடப்புளிக்காடு உள்ளிட்ட 11 கிராமங்களிக்கு கிராம முன்சீப் ஆக இருந்த கருப்பையாத்தேவர் – வள்ளியம்மை இணையருக்கு முதலாவது குழந்தையாக 1918ம் ஆண்டு ஜனவரி 14 அன்று பிறந்தவர் முத்தையா ஆவர்
அரசியல் ஆர்வம்:
1932 ஆம் ஆண்டில் பெரியார் சோவியத்து நாட்டில் சுற்றுப்பயணம் முடித்துப் பட்டுக்கோட்டையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு சோசலிசத்தின் பால் அதீத ஈடுபாட்டை முத்தையாவிற்கு ஏற்படுத்தியது. 1932 ஆம் ஆண்டு பேராவூரணி தேசவிடுதலைத் தியாகி வீராச்சாமித் தேவர் தலைமையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் முத்தையா தன் மாணவ நண்பர்களுடன் சென்று மறியல் செய்தார். இதுவே இவரது பொது சிந்தனையின் முதல் தொடக்கம் ஆகும்.
இவர், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என அனைவரையும் இணைத்து ஒரு சங்கத்தை, அதாவது தமுஎச என்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை முற்போக்கு எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியுடன் இணைந்து ஏற்படுத்தினார்
இறப்பு:
60 ஆண்டுகால அரசியல் பணியிலும், 50 ஆண்டுகால இதழாளர் வாழ்விலும், இலக்கியவாதி, மக்கள் போராளி, இதழாளர், விடுதலைப் போராட்ட வீரர், எனப் பன்முகத்தன்மையோடு வாழ்ந்த கே. முத்தையா கடந்த 2003ஆம் ஆண்டு ஜீன் மாதம் 10 ஆம் தேதி மதுரையில் காலமானார். இவரது சாதனைகளையும் பெருமையையும் இவரது பிறந்த நாளான இன்று அறிந்து கொள்வதில் பெருமிதம்கொள்வோம்.