வரலாற்றில் இன்று (16.05.2020)…. கோவில் கருவறை தீண்டாமை ஒழிக்கப்பட்டு அனைவரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்ட தினம் இன்று….

மனிதனாய் பிறந்த மாணுடனுல் எத்தனை வேறுபாடுகள். தீண்டாமை எனும் கொடிய அரக்கனை அகற்ற போராடிய பகுத்தறிவாதிகளுக்கு கிடைத்த முக்கிய வெற்றி குறித்த சிறப்பு தொகுப்பே இந்த பதிவு. கோயில் கருவறையில் ஒருசிலர் மட்டும் செல்லலாம் ஏஐயோர் செல்லக்கூடாது என்று கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கொள்கையை தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார். ஆயினும், பல்வேறு சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி 2006 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தனிச்சட்டத்தை இயற்றிய பெருமை அவரையே சாரும். இந்த சட்டத்தின் மூலம் கருணாநிதி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவதற்கான நடவடிக்கை தான் இது எனக் கூறினார். இந்த சட்டம் இயற்றிய பிறகும் பிராமணரல்லாத ஒருவரை அர்ச்சகராக்க முடியாமல் சிக்கல்கள் நீண்டுகொண்டே இருந்தன. சட்டம் இயற்றி 12 ஆண்டுகள் கழித்துதான் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் பிராமணரல்லாத ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.