சேவை என்பது இந்த உலகில் யாரிடமும் எதையுமே எதிர்பார்க்காமல் ஒருவரின் தேவையை உணர்ந்து அந்த தேவையை பூர்த்தி செய்வதே சேவை ஆகும். அந்த சிறப்பான பணியை உலகளவில் செய்து பெரும் பாராட்டை பெற்ற அமைப்பின் பெய்ர் ரெட் கிராஸ் என்ன்னும் செஞ்சிலுவை அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் சேவையை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 8ம் தேதி ‘உலக செஞ்சிலுவை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ரெட் கிராஸ் அமைப்பின் வரலாற்றை அறிவேம். 1859ம் ஆண்டு சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல வியாபாரியும், கோடீஸ்வரருமான ஹென்றி டுனான்ட், தனது வர்த்தகம் தொடர்பாக இத்தாலியில் உள்ள சோல்பெரினோ என்ற நகருக்கு வந்தார். அப்போது அந்நகரில் கடும் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அங்குள்ள ஒரு வீதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த போர்களினால் காயமடைந்தவர்கள் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பிய படியே இருந்தனர். குழந்தைகளும் உணவுக்காக கதறி அழுதன. அதையெல்லாம் கண்ட ஹென்றிக்கு வர்த்தக உணர்வு மறைந்தது. காயமடைந்த ராணு வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை செய்தார். அவரோடு அங்குள்ள மக்களும் இணைந்து சேவையில் ஈடுபட்டனர். அத்தோடு மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதும் சென்று போருக்கு எதிராக பிரசாரம் செய்தார். அப்போது தோற்றுவிக்கப்பட்டதுதான் ‘யங்மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன்’ (YMCA) எனப்படும் செஞ்சிலுவை சங்கம் ஆகும். பெரும் கோடீஸ்வரரான ஹென்றி சமூக சேவையில் முழு நேரத்தையும் செலவழித்ததால், செலவுக்கே வழியின்றி தடுமாறினார். முகம் தெரியாதவர்களுக்கு எல்லாம் உணவிட்ட ஹென்றி தனது ஒரு வேளை உணவுக்கே வழியின்றி மிகவும் சிரமப்பட்டார். ஆனால், அவரது சங்கங்கள் பல நாடுகளுக்கு பரவி உலகளாவிய சிறந்த அந்தஸ்து பெற்றது. இவரது அரிய செயல்பாடுகளுக்காக 1901ல் அமைதிக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1910, அக்டோபர் 30ல் மறைந்தார்.
இந்த சேவை அமைப்பானது, இயற்கை பேரிடர், போரில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செஞ்சிலுவை சங்கம் நூற்றாண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இச்சங்கமானது 7 முக்கிய கொள்கையை முன்னிறுத்தி சேவை செய்து வருகிறது.
மனித உயிர்களையும், அவர்களுக்கான ஆரோக்கியத்தையும் உறுதி செய்தல், தேசம், இனம், ஜாதி சாகுபடின்றி ஒருவரின் துயரத்தில் பங்கு கொள்ளுதல், அரசு மற்றும் அரசியல் சார்ந்த கொள்கைகளில் ஈடுபடாமல் இருத்தல், ஒவ்வொரு நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்தல்.
யாருடைய விருப்பு, வெறுப்புகளுக்கு உட்படாமல் சேவை செய்தல்.
சேவையின்போது ஒற்றுமையை கடைப்பிடித்தல், சேவை சங்கங்கள் அனைத்துமே மிகுந்த பொறுப்பு, கடமை கொண்டவை, இப்படி கொள்கைகளை வகுத்து செயல்படுகிறது
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…