வரலாற்றில் இன்று(07.05.2020)…. நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர் தாகூர் பிறந்த தினம் இன்று…
நமது நாட்டின் தேசிய கீதத்தை இயற்றிய தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். இவர் தனது கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக 1913-ஆம் அண்டு இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவரே. மக்களால் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877-ம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் ஆங்கிலேய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவர் புகழ்பெற்ற விசுவபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர் ஆவர், இன்னொருவர் ஓவியக் கலையில் மிகவும் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவராக திகழ்ந்தார்.