வரலாற்றில் இன்று(06.05.2020)…. மண்ணுலகம் காக்க நரசிம்மர் அவதாரமாக பரம்பொருள் அவதரித்த தினம் இன்று…

Default Image

இந்து சமய மார்க்கத்தில் பல எண்ணற்ற தெய்வங்களை கொண்டிருந்தாலும்  அன்பு மற்றும் எல்லா இடத்திலும், எல்லோரிடத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதையே அனைத்து  தெய்வங்களும்  உணர்த்துவதாக இருக்கிறது. அப்படி இறைவனை முழுமையாக நம்பி, அவனை நம்பினால் கை விடமாட்டார் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது தான் இந்த நரசிம்ம அவதாரம். காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே அவருக்கே மிகவும் பிடித்த அவதாரம் என்றால் அது நரசிம்ம அவதாரம் தான். இந்தாண்டு  மே மாதம் 06ம் தேதி அதாவது இன்று  நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் இந்த நரசிம்ம அவதாரம்.  கடவுளிடம் கடும் தவம் புரிந்து சாகா வரம் கிடைக்காது என்பதை அறிந்தும்  அரக்கன் இரணியன் சிவபெருமானிடம் கேட்ட வினோத வரத்தை கேட்டான் அந்த வரமானது, எனக்கு பகல் பொழுதில் மரணம் ஏற்படக் கூடாது,
இரவு பொழுதிலும் மரணம் நிகழக் கூடாது,மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது,மிருகத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது, ஆகாயத்திலும் மரணம் நிகழக்கூடாது, பூமியிலும் மரணம் நிகழக்கூடாது, எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம் நிகழக்கூடாது.என எந்தெந்த வழியில் மரணம் நிகழுமோ அதை எல்லாம் தடுக்கும் வகையில் வரத்தைப் பெற்ற இந்த இரணியன் மக்களையும், தேவர்களையும் கொடுமைப் படுத்தி வந்தான். இரணியனின் ஆணவத்தை அழிப்பதற்காக அவதரித்தவர் சிங்க முகமும், மனித உடலும், பெரிய நகங்களுடன், நாராயணனை நம்பி அழைத்த பிரகாலதனை காக்க ஒரு தூனை பிளந்து கொண்டு அவதரித்தார் நரசிம்மர். எனவே தன்னை நம்பும் பக்தர்களை காக்க எந்த ரூபத்தில் வருவார், எந்த இடத்திலிருந்து வருவார் என்று தெரியாது. இருப்பினும் அழைத்த குரலுக்கும், நம்பிக்கையோடு அழைத்தால் வருவார் என்பது நிச்சயம்.இதையே இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற வாக்குக்கு இணங்க இந்நிகழ்வு அமைந்தது. ஏன் நீங்கள் உள்ளன்போடு இதை வாசிக்கும் இந்த பதிவில் கூட அவன் நிறைந்திருப்பான். மனமே வாழ்வு, பலவீனமே மரணம். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
Kamala Harris - US Election
06.11.2024 Power Cut Details
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin
yellow alert rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar