வரலாற்றில் இன்று(03.04.2020)… மராட்டிய பேரரசர் சிவாஜி மறைந்த தினம் இன்று…
இந்தியாவில் சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று இந்திய மக்களால் அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே மராட்டியப் பேரரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் ஆவர். இவர், சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், டெக்கான் சுல்தானியர்கள் மற்றும் மொகாலியர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த இவரது தந்தை சாஹாஜி, ஒரு மராட்டிய படை தளபதியாக விளங்கியவர். ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் (இந்திய சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்தார். சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கு இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார். ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது. நன்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை உருவாக்கி அமைத்தார். பெண்களை யுத்த காரணத்திற்காக பயன்படுத்துதல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன. அவர் தம்முடைய காலத்தில் பக்தியும், பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக விளங்கினார். சிவாஜி மகாராஜா, அவருக்கென இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகளை வகுத்திருந்தார். மராத்தியில் கானிமி காவா என்றழைக்கப்படும், கொரில்லா உத்திகளைப் பயன்படுத்துவதில் அவர் நிபுணராக விளங்கினார். அது இறப்பு எண்ணிக்கையையும், வேக தாக்குதல், திடீர் தாக்குதல், ஒருமுகப்பட்ட தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளை மையப்படுத்தி இருந்தது. அவரின் எதிரிகளை ஒப்பிடும் போது, பேரரசர் சிவாஜியிடம் மிகச்சிறிய இராணுவமே இருந்தது. ஆகவே இந்த சமமின்மையைச் சமாளிக்க உதவும் வகையில் தான், அவர் கொரில்லா யுத்தத்தை செய்ய வேண்டி இருந்தது.அவர் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையாக இருந்தன, அவர் தம் தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் கீழ் அதனை ஒரு வலிமையான கடற்படை கொண்டு பாதுகாத்து வந்தார். வெளிநாட்டு கடற்படை கப்பல்களை, குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிஷாரின் கப்பல்களை மடக்கி ஒடுக்குவதில் அவர் வெற்றிகரமாக இருந்தார். மிகப்பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் “இந்திய கடற்படையின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். கடற்புற மற்றும் நிலப்பகுதி கோட்டைகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பதென்பது சிவாஜி மகாராஜின் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய இடம் வகித்தன. கடற்கரை மற்றும் கடல்எல்லைகள் மீதான சிவாஜியின் பாதுகாப்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் விரிவாக்கத்தையும், இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அவர்களின் வர்த்தகத்தையும் தவிர்க்க முடியாமல் தாமதப்படுத்தியது.
இவ்வளவு திறமைவாய்ந்த சத்ரபதி சிவாஜி இரத்தபெருக்கு நோயான இன்டெஸ்டினல் ஆன்த்ரக்ஸினால் இறந்ததாக கூறப்படுகிறது. அவரின் இறுதிச்சடங்கு அவர் மகன் ராஜாராம் மற்றும் மனைவி சோயராபாய் முன்னிலையில் ராஜ்கட்டில் நடைபெற்றது.மாற்றப்பட்டன. மத்திய இந்தியாவை பல ஆண்டுகாலம் கயவர்களின் பிடியில் இருந்து நல்லாட்சி அளித்த சத்ரபதி சிவாஜி மறைந்த தினம் வரலாற்றில் இன்று…