ஆனந்தி கோபால் ஜோஷி அல்லது ஆனந்திபாய் ஜோஷி மார்ச் மாதம் 31ஆம் தேதி 1865ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலுள்ள பூனாவில் ஒரு பணக்கார வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் யமுனா. இவருக்கும் கோபால்ராவ் ஜோஷி என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது இவருக்கு 9 வயதுதான். முதல் மனைவியை இழந்த கோபால் ஜோஷி இவரைவிட 20 வயது மூத்தவர் ஆவார். கோபால்ராவ் ஜோஷி கல்யாணில் அஞ்சல் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். ஆனந்திபாயின் 14 வது வயதில் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை மருத்துவ வசதியில்லாததால் பத்தே நாட்களில் இறந்து போனது.குழந்தையின் மரணம் அவரது வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மருத்துவராக வேண்டுமென்ற எண்ணம் அவருக்குள் தீவிரமாக எழுந்தது. இதன் காரணமாக 1883ஆம் ஆண்டு ஆனந்திபாய் கொல்கத்தாவிலிருந்து நியூயார்க் நகருக்குக் கப்பலில் புறப்பட்டார். தார்பார்ன் தம்பதியினருக்குப் பழக்கமான ஆங்கிலப் பெண்மணிகள் இருவர் அவருக்குத் துணையாக உடன் பயணம் செய்தனர். தியோடிசியா நியூயார்க்கில் அவரை வரவேற்றார். ஆனந்திபாய் பெண்கள் மருத்துவக் கல்லூரிக்கு (பென்சில்வேனியா) விண்ணப்பித்தார்.விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அக்கல்லூரித் தலைவர் ரேச்சல் போட்லி, அவரைக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டார். ஆனந்திபாய் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது அவருக்கு வயது 19. அமெரிக்காவின் கடுங்குளிரும் பழக்கமில்லாத உணவும் அவரது உடல் நலத்தை மிகவும் மோசமாக்கின. காச நோய் அவரைத் தாக்கியது. அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி அவர் மார்ச் 11, 1886ல் மருத்துவப் பட்டம் (எம். டி) பெற்றார். அவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் தலைப்பு – ஆரிய இந்துக்களின் தாய்மை மருத்துவம். மருத்துவராகப் தேர்ச்சி பெற்ற அவருக்கு விக்டோரியா மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். 1886ன் இறுதியில் ஆனந்திபாய் இந்தியாவிற்குத் திரும்பினார். இந்தியாவில் அவருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்தது. கோலாப்பூர் சமஸ்தானத்திலிருந்த ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பெண்கள் மருத்துவப்பிரிவின் பொறுப்பு மருத்துவராக நியமிக்கப்பட்டார். பின், பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் 1887ஆம் ஆண்ட் 22 வயதுகூட நிரம்பாத ஆனந்திபாய் காலமானார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…