வரலாற்றில் இன்று(30.03.2020)… இந்திய கவிஞர் ஆனந்த் பக்சி மறைந்த தினம் இன்று…

Default Image

ஆனந்த் பக்சி அவர்கள் பாகிஸ்த்தானின் இராவல்பிண்டி நகரில் 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் நாள் பிறந்தார்.இவரது படிப்பு  பாதியிலேயே நின்றது. பின், இவர் இந்திய கடற்படையில் 2 ஆண்டுகளும் இந்திய ராணுவத்தில் 6 ஆண்டுகளும் பணியாற்றினார். இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் லக்னோ வந்தார். பின் அவர், அங்கு ஒரு  டெலிபோன் ஆப்ரேட்டராக பணியாற்றினார். பின்னர் அவர் தலைநகர் டெல்லி சென்று மோட்டார் மெக்கானிக் வேலை செய்தார். இவருக்கு  சிறுவயதிலேயே கவிதை எழுதுவது ஆசை. எனவே அதையும் விரும்பி  தொடங்கினார். இவரது கவிதைத் தொகுப்புகள் இந்திய ராணுவத்தின் சைனிக் சமாசார் என்ற பத்திரிகையில் வெளிவந்தன.ராணுவத்திலிருந்து வெளிவந்த பின்னர் பம்பாயில் இவர் இந்தித் திரையுலகில் வாய்ப்புத் தேடி அலைந்தார். பின் பல வாய்ப்புகள் இவருக்கு  கிடைத்ததால் இவர் இயற்றிய பாடல்களின் வெற்றியால் தான் இவருக்கு இந்தித் திரையுலகில் ஒரு அடையாளம் கிடைத்தது. பாடல்கள் எழுதுவதிலும் பின்னணி பாடுவதிலும் இந்தி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி சூழலையும் ஆழ்ந்த உணர்வையும் வெளிப்படுத்தினார். இவர் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் நாள் தனது 71வது அகவையில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்