வரலாற்றில் இன்று(29.03.2020)… இந்திய பெண் எழுத்தாளர் பூபுல் செயகர் மறைந்ததினம் இன்று…

Published by
Kaliraj

பூபுல் செயகர் என்பவர் இந்தியப் பெண் எழுத்தாளர், நூலாசிரியர் மற்றும் செயல்பாட்டாளர் ஆவார்.  இவர் செப்டெம்பர் மாதம் 11ஆம் நாள் 1915ஆம் ஆண்டு  உத்திரபிரதேச மாநிலம் இடாவா எனும் ஊரில் பிறந்தார். இவர், கிராமியக் கலைகள், கைத்தறிகள், கைவினைப் பொருள்கள் போன்றவற்றின் வளர்ச்சியில் ஆர்வத்துடன் வினையாற்றியவர். இந்தியத் தலைமை அமைச்சர்களான  நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டு இருந்தார். தத்துவ அறிஞர் ஜே.கிருட்டினமூர்த்தி, பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இந்திரா காந்திக்கும் இராஜீவ் காந்திக்கும் பண்பாட்டுத் துறையில் ஆலோசகராகவும்  இருந்தார்.இந்திய மரபுகள் சார்ந்த கலைகளை அமெரிக்க ஐக்கிய நாடு , பிரான்சு, ஜப்பான் போன்ற நாடுகளில் பயணம் செய்து அங்கு இந்தியக் கலை விழாக்களையும் கண்காட்சிகளையும் நடத்தினார். பின், இவரிடம் நேரு, 1950 ஆம் ஆண்டில் கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கான வழிமுறைகளைக் கண்டறிந்து கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி அனைத்திந்திய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதிக் குழுமத்தின் அவைத்தலைவர் ஆனார். 1956 இல் தேசிய நெசவு அருங்காட்சியத்தை நிறுவினார். இந்திய வரலாற்று பண்பாட்டு தொண்டு நிறுவனத்தை 1984 இல் நிறுவினார். இதன் மூலம் நாட்டின் பாரம்பரிய சொத்துக்கள், நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும் , பாதுகாக்கவும் ஏற்பாடு செய்தார். இத்தகய அரும் பணியாற்றிய இவர் மார்ச் மாதம் 29ஆம் நாள் 1997ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். 

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

6 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

8 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

10 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

10 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

11 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

12 hours ago