குழந்தைகள் மீது மிகுந்த பற்றும், மாறாத அன்பும் பற்றும் கொண்டு விளங்கியவர், மற்றும் குழந்தைகளைக் காணும்போதெல்லாம் அவர்களை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வாழ்த்தி மகிழும் தாயுள்ளம் கொண்டவர் நமது முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள். அதிலும், குறிப்பாக, பெண் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, அவர்கள் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பாடுபட்டவர்,
அன்னை தெரசாவால் பாராட்டப்பட்ட “தொட்டில் குழந்தைகள் திட்டம்”, “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்”, “அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள்”, பெண் கல்வியை ஊக்குவிக்க, படித்த பெண்களுக்கு “ஊக்கத் தொகையுடன் கூடிய தாலிக்குத் தங்கம்”, அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் வண்ணம்
“ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்கள் அமைத்தல்” பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை, வளரிளம் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் போன்ற புதுமையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்திக் காட்டியவர் ஜெயலலிதா அவர்கள் ஆவர். இத்தகைய பெண்குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சிறப்பு கவனம் எடுத்து புதுப்புது திட்டங்களை நிறைவேற்றிய இவரது பிறந்த நாளை தமிழக அரசு பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்தது. இதன்படி குழந்தைகளுக்காக, குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக ஜெயலலிதா ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூறத்தக்க வகையில், அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதியை, “மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக” அனுசரிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி வரலாற்றிலின்று பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாகும். இந்நாளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதியேற்போம்.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…