வரலாற்றில் இன்று(20.02.2020)… மகளீரின் முன்மாதிரி வை.மு.கோதைநாயகி அம்மாள் மறைந்த தினம் இன்று…
1901 ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் நீர்வளூர் என்.எஸ். வெங்கடாச்சாரியார்-பட்டம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர் வை.மு.கோதைநாயகி. கோதைக்கு ஒரு வயது இருக்கும் போது தன்னுடைய தாயை இழந்துவிட்டார். பாட்டி வேதவல்லியம்மாளிடமும் சித்தி கனகம்மாளிடமும் வளர்ந்தார். சிறு வயது முதலே தன் சித்தப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார். அக்காலத்தில் பெண்களை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் இருந்ததில்லை. கோதையும் பள்ளி செல்லவில்லை. அவருக்கு அக்கால பழக்கத்தின் படி பால்ய விவாகமும் செய்துவிட்டனர். அதாவது, 1907–ல் கோதைநாயகிக்கு ஐந்தரை வயதான போது, திருவல்லிக்கேணியில் வசித்து வந்த வை.மு. சீனிவாச அய்யங்காரின் மூன்றாவது மகனான ஒன்பது வயது நிரம்பிய வை.மு. பார்த்தசாரதிக்கு கோதையைத் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்குப் பிறகு குடும்பப் பெயரான வைத்தமாநிதி முடும்பை என்ற பெயர் கோதைக்கும் சேர்ந்தது. அதனால் அவர் (வைத்தமாநிதி முடும்பை) வை.மு. கோதைநாயகி ஆனார். பள்ளி செல்லாததால் கோதைக்கு எந்த மொழியும் எழுதப் படிக்கத் தெரியது. ஆனால் செவிவழி கேட்டே அனைத்து பாசுரங்களையும் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் கரைத்துக் குடித்தவர். அதனாலயே பள்ளிக்குக் கூட சென்றிராத கோதைக்கு வீட்டில் ஓரளவு கல்வியறிவு பெறும் வாய்ப்பு கிட்டியது. தன் மாமியாரிடம் தெலுங்கும் கற்றுக் கொண்டார். இதன் பின், இவரின் படைப்புகள் ஏராளம், அவைகளுள் சில, வைதேகி (1925),
- பத்மசுந்தரன் (1926)
- சண்பகவிஜயம் (1927)
- ராதாமணி (1927 – 4)
- கௌரிமுகுந்தன் (1928 – 2)
- நவநீதகிருஷ்ணன் (1928)
- கோபாலரத்னம் (1929)
- சியாமளநாதன் (1930)
- சுகந்த புஷ்பம் (1930)
- காதலின் கனி (1933)
- கலா நிலையம் (1941)
- மதுர கீதம் (1943)
- பிரார்த்தனை (1945)
- புதுமைக் கோலம் (1947)
- தூய உள்ளம் (1950)
- நியாய மழை (1950)
- ப்ரபஞ்ச லீலை (1950)
- ப்ரேமாஸ்ரமம் (1950)
- மனசாட்சி (1950)
- ஜீவநாடி (1950)
- சௌபாக்கியவதி (1950)
- நம்பிக்கைப் பாலம் (1951)
- பாதாஞ்சலி (1951)
- சுதந்திரப் பறவை (1953)
- நிர்மல நீரோடை(1953)
- கிழக்கு வெளுத்தது (1958)
இத்தகைய பல்வேறு சாதனைகள் புரிந்த இவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியும் காத்திருந்தது, 1956ஆம் ஆண்டில் இரின் ஒரே மகனான ஸ்ரீநிவாசன் திடீரென்று இறந்தார். அவரது மறைவு இவரை நிலைகுலைய வைத்துவிட்டது. பெண்களின் வழிகாட்டியாக, சிறந்த விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, நாடக ஆசிரியராக, நாடக இயக்குநராக, இசை வல்லவராக, பத்திரிக்கை ஆசிரியராகப் பன்முக ஆற்றலுடன் விளங்கிய நாவல் ராணியாகிய வை.மு.கோதைநாயகி அம்மாள், தன் மகன் இறந்து தான் மட்டும் இருக்கிறோமே என்று வருந்தி சரியாக உணவு உண்ணாமல் உறக்கமின்றி உடம்பை வருத்திக் கொண்டார். இதனால் அம்மையார் கொடிய காச நோய்க்கும் ஆளானார். தாம்பரம் காசநோய் மருத்துவ மனையில் உரிய சிகிச்சை பெற்றும் பலனின்றி 1960ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் நாள் மருத்துவமனையிலேயே இறந்தார். இத்தகைய மகளீரின் முன் மாதிரியாக திகழ்ந்தவரின் மறைந்த தினம் இன்று.