வரலாற்றில் இன்று(19.02.2020)… தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த தினம் இன்று…

Default Image

உலகம் முழுதும் உள்ள தமிழ்ச்சொந்தங்களால் ‘தமிழ் தாத்தா’ என போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயர், 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  இதே நாளில் அதாவது 19ஆம் தேதி   கும்பகோணத்துக்கு அருகே உள்ளே உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது பெற்றோர்கள்:- வேங்கட சுப்பையர்-சரஸ்வதி அம்மாள் ஆவர், இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர் ஆவர். எனவே,  உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றுத்தேர்ந்தார். பின் தனது  17 ஆம் அகவையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். பின், தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.தமிழர்கள்  மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களின் ஓலைச்சுவடிகள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இவர், தமது அச்சுப் பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகிற்கு அறியச் செய்தவர். உ.வே.சா 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-க்கும் மேற்ப்பட்ட ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். அதிலும், சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார். உ.வே.சா அவர்கள்  தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆற்றிய பெரும்  பங்களிப்பினைப் பாராட்டி கடந்த மார்ச் மாதம்  21ஆம் தேதி , 1932ஆம் ஆண்டு  சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இதுதவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் சிறப்பு பட்டமும் பெற்றுள்ளார்.
மேலும், இந்திய அரசு  இவரது நினைவு அஞ்சல் தலையை பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் , 2006ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. மேலும், உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04 03 2025
good bad ugly VS idly kadai
PMModi -Animals
IMD - Summer
IndvsAusSfinal
TN CM MK Stalin
steve smith travis head