சர்வதேச நாடுகளின் ஒருங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை திகழ்கிறது. இந்த சபையின் பொதுச்சபையில் கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ம் நாள் உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். இந்த, 21ஆம் நூற்றாண்டில் மக்கள் அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்பட இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சர்வதேச மனித ஒருமைப்பாடு தினத்தன்று, உலகமெங்கும் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி விவாதிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிவதற்குமாக நிகழ்ச்சிகள் இந்த நாளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் இந்த நாளின் மூலம் மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…