பிறப்பு:
தேவநேய பாவாணர் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஞானமுத்து-பரிபூரணம் அம்மையார் தம்பதியருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார்.
கல்வி:
தன் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், ஆம்பூரில் உள்ள மிசௌரி லூத்தரன் விடையூழிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார். பின், பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
ஆசிரியர் பணி:
இவர், தன் 17ம் அகவையில், 1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின், 1921ம் ஆண்டு, ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு பெற்றார். பின், 1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பும் பெற்றார்.’
இவரின் சிறப்பு:
மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமான இவர், சுமார் 40க்கும் மேலான மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். இவர், தமிழறிஞர் மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து தமிழ் வளர்ச்சி அடைய உழைத்தார். இவருடைய ஒப்பற்ற தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கண்ட பெருஞ்சித்திரனாரால் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று பெயர் சூட்டினார்.இவர், திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி தமிழென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்த கூறினார். இத்தகைய தமிழ் பணிக்கு அரும்பாடு பட்ட இவர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…