வரலாற்றில் இன்று(06.02.2020)… நோபல் பரிசு பெற்ற எல்லை காந்தி பிறந்த தினம் இன்று…
- பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியர் அல்லாதவர் பிறந்த தினம் இன்று.
- இவரது பிறந்த இந்நாளில் இவரை நினைவு கூறுவோம்.
முந்தைய ஒருங்கினைந்த இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவரும், தேசப்பிதா மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும், எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவரான கான் அப்துல் காபர் கான் பிறந்த தினம் இன்று. இவர் ஆங்கிலேயர்களின் ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்த இவர், குதை கித்மத்கர் அதாவது “இறைவனின் தொண்டர்கள்” என்ற புரட்சிப் படையை அமைத்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்ததால்,
இவர் பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர், இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தார், இவர், இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்தார். இவரை பலமுறை பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் இவரை, இந்திய உளவாளி என்று வண்மையாக தூற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு, 1985-இல் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும், இவர் 1987-இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார். பாரத ரத்னா பெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமை பெற்றவர்.