இந்த நாள், இன்றைய நாளான பிப்ரவரி 2 ஆம் தேதி வருடம்தோறும் கொண்டாடப்படுகிறது. சதுப்பு நிலம் என்பது, உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை, அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த தினத்தை இன்றைய நாள் கொண்டாட காரணம், கடந்த 1971-ல் காசுபியன் கடற்பகுதியிலுள்ள ஈரான் நாட்டின் ராம்சர் என்னும் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து முடிவுசெய்து, அதுபற்றிய விவாதக் கூட்டத்தையும், அதே ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இதேநாளை உலக சதுப்புநில நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மேலும் இக்கூட்டம் ராம்சர் நகரில் நடைபெற்றதால் இந்த அமைப்புக்கு ராம்சர் அமைப்பு என பெயர் பெற்றது. இந்த ராம்சர் அமைப்பில், நம் இந்தியா உட்பட 161 நாடுகள் உள்ளன. உலகின் சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த 1,950 சதுப்புநிலங்கள் பட்டியலிடப்பட்டு அவ்வமைப்பால் அறிவிக்கப்பட்டது. எனவே இந்த தகவலை தெரிந்து கொண்ட நாம் சதுப்பு நிலங்களை பாதுகாப்பது நம் அனைவரது கடமியும் ஆகும்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…