வரலாற்றில் இன்று(1.02.2020)… விண்வெளியில் பறந்த முதல் இந்திய பெண் மறைந்த தினம் இன்று…

Default Image
  • நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் போய் நிலாவுக்கே சென்று சோறு ஊட்டப்போகும் காலம் வந்துவிட்டது. இதற்க்கு இத்துறை முன்னோடிகளின் கடின உழைப்பே காரணம் என்று கூறலாம்.
  • இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை மறைந்த தினம் இன்று.

பிறப்பு:

கல்பனா சாவ்லா இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலம்  கர்னல் என்னும் ஊரில் ஒரு  பிறந்தார்.  கல்பனா என்றால் சமஸ்கிருதத்தில் கற்பனை என்பது பொருள்.

Related image

இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்ததிலிருந்து  விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது. இதன் விளைவாக விண்வெளி துறையில் சாதனை புரிய இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

கல்வி:

  •  கல்பனா சாவ்லா தனது தொடக்க கல்வியைக் தனது ஊரான கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடங்கினார்.
  • பின், அவர் 1982 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தைப் பெற்றார்.
  • அதே வருடம் அதாவது 1982ல் அவர் அமெரிக்கா சென்று, அங்கு அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார்.
  • அதன் பின் பௌல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்தை பெற்றார்
  • அதோடு மட்டுமல்லாது, விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.

விண்வெளி துறையில் கல்பனா:

கல்பனா சாவ்லா மார்ச் மாதம் 1995 ஆம் ஆண்டு, நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். பின் இவர்,  1996 ஆம் ஆண்டு தனது  முதல் விண்வெளி பயணத்திற்குத் தேர்வு  செய்யப்பட்டார். இதில் இவர் கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவர்  கல்பனா என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for kalpana chawla

கல்பனாவின் தனது முதல் பயணத்திலேயே 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோ மீட்டர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். பின் மீண்டும் கல்பனா சாவ்லா, 2000 ஆம் ஆண்டில்,  STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது.

Image result for kalpana chawla

எனவே 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் ( flow liners) பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும்  STS-107 விண்வெளிக்குத் திரும்பியது.

இறப்பு:

STS-107 விண்கலம் விண்வெளிக்குத் சென்று திரும்பிய  பிப்ரவரி 1, 2003  இல்,

Related image

அந்த கொலம்பியா விண்கலம் STS-107 அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறி கல்பனா சாவ்லா உள்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியாகினர். விண்வெளியில் பறந்த முதல் இந்திய பெண் மறைந்த தினம் இன்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi