பிறப்பு:
ரஸ்யா பொதுவுடைமை தலைவர், விளாடிமிர் லெனின் ஏப்ரல் மாதம் 22ம் தேதி, 1870ம் ஆண்டு, ரஷ்யாவில் உள்ள வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் பிறந்தார்.
குடும்பம்:
அவரது பெற்றோர் இல்யா உல்யனாவ் மற்றும் மாயா உல்யானவ் ஆவர். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். இவருக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர்.
பொதுவுடைமை சிந்தனை:
லெனின் ரஸ்யாவில், ஒரு சிறந்த செயல்வீரராக விளங்கினார். அங்கு பொதுவுடமை அரசை நிறுவுவதற்குக் இவர் கண்ணும் கருத்துமாகப் ஈடுபட்டார். இவர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறை அரசியல் செயற்படுத்தினார். இதனால், 1917 நவம்பர் முதல் உலகம் எங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. இன்று உலக மக்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பொதுவுடமை ஆட்சியின் கீழ் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகய நிகழ்வை நிகழ்த்திய விளாடிமிர் லெனின் மீது 1918-ஆம் ஆண்டு ஒரு துப்பாக்கி சூடு நடந்தது.
அதை ஒரு ரஷ்யப் பெண் நிகழ்த்தினார். இருப்பினும் அந்நிகழ்வில் லெனின் உயிர் தப்பினார். லெனின் இடைவிடாமல் நீண்டகாலம் பொது உடைமை சிந்தனையை உலகிற்கு கொண்டு செல்ல அயராது உழைத்து வந்ததன் காரணமாக, அவருடைய உடல் நலம் சீர் குலைத்தது. இதன் காரணமாக 1922 மே மாதம் லெனினுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. பின் அவருக்குத் திசு தடித்தல் என்னும் நோய் முற்றியதால் பேச முடியாத நிலையும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, டிசம்பர் மாதம் இவரது வலக்கையும் செயல் இழந்தது.
இறப்பு:
அதன் பின் முற்றிலும் செயலற்ற நிலையிலேயே இருந்த லெனின் தனது 54-ம் வயதில் 1924-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் நாள் மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார். இவருடைய மறைவு உலக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்ந்தியது. இத்தகைய சிறந்த கொள்கையை உலகிற்கு வளர்த்து சென்ற மறைந்த லெனின் உடல் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்ட தினம் இன்று. இவருடைய உடல் பதப்படுத்தப்பட்டு மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் ஒரு அழகான கல்லறையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து வருகிறார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…