வரலாற்றில் இன்று(24.01.2020)… இந்தியாவில் குடிமை பணியில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் அதிகாரி பிறந்த தினம் இன்று.
- குடிமைபணியில் சேர்ந்த முதல் பெண்ணின் சவால்களும் சாதனைகளும்.
- இந்நாளில் இவரை நினைவு கொள்ளுவோம்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டையில் ஜனவரி 24ம் நாள், 1924 ஆம் ஆண்டு பிறந்தார் சிபி.முத்தமா .இவர் மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின், சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின், சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.
பின், இந்திய குடிமைபணிக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த முதல் இந்திய பெண் இவர் ஆவர். மேலும், இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்றப் பாடுபட்டவர். இவர்குறித்த சிறப்பு தொகுப்பு.
அரசு பணியில் பாகுபாடும் இவரது போராட்டமும்:
குடிமை பணியில் வெற்றிபெறுவோரில், ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருந்த வெளியுறவுத்துறையில் பணிபுரிய விரும்பி அரசுபணித் தேர்வாணையம் நடத்திய தேர்வில் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று இந்திய வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்தார் முத்தம்மா. ஆனால், வெளியுறவுத் துறையின் பணி விதிகளின் பிரிவு 8(2)ல் வெளியுறவுதுறையில் பணீபுரியும் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்குமுன் இத்துறையில் பணிபுரியும் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்று உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகள் வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்ற முடியாது என்று அரசு கருதினால் அந்த பெண்மணி ராஜினாமா செய்ய வேண்டுமென நிர்பந்திக்கும் என்று அந்தப் பிரிவு சொல்கிறது. இதே துறையின் விதி எண் 18ல் ஆள்சேர்ப்பு, பணிமுதிர்வு மற்றும் பதவி உயர்வு இதில், திருமணமான எந்தப் பெண்ணும் இப்பணியில் சேரும் உரிமை தனக்கு உண்டென உரிமை கோர முடியாது என்கிறது.
இந்த இரண்டு விதிகளூம் பெண்ணுரிமை மற்றும் சமத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு எதிராக இருக்கிறதென்றும், பெண் என்பதாலேயே நான் பணியிலமர்வதற்கான உரிமை மறுக்கப்படுவதென்பது அரசியல் சாசனத்திற்கெதிரானது என்றும் இந்தக் காரணங்களாலேயே தனது பதவி உயர்வு தடைபட்டிருக்கிறது என்றும் எனவே இந்த பால்பாகுபாடுகளைக் களைய நீதிமன்றம் உதவ வேண்டும் எனவும் கோரி சி.பி.முத்தம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வெற்றிகண்ட சட்ட போராட்டம்:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள், 14 மற்றும் 15 அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கெதிரான பாலியல் பாகுபாட்டை வலியுறுத்துகின்றன என்று கூறினார். மேற்காணும் பாலியல் பாகுபாடுகள் நிறைந்த விதிகள் நீக்கப்பட்டதாக வெளியுறவுத் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தையும் ஏற்றுக் கொண்டார்.
முத்தம்மாவின் தகுதி பதவி உயர்வுக்கு ஏற்றதாக இருக்கிறது என்று கூறி அவருக்கு பதவி உயர்வு அளித்த வெளியுறவுத் துறை அவரை ஹேகில் இந்தியத் தூதராக நியமித்தது. அன்று வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்த தீர்ப்பு ஆணாதிக்கக் கருத்துகள் கொண்ட சட்ட விதிகள் திருத்தி எழுத ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. பின் இவர், 32 ஆண்டுகள் பணியாற்றி பின்னர் இந்தியக் குடியுரிமைப் பணியில் இருந்து 1982 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இந்தியாவின் முதல் பெண் குடிமை பணிக்கு தேர்ச்சிபெற்ற முத்தம்மா பிறந்த தினம் இன்று.