வரலாற்றில் இன்று(09.02.2020)… இந்திய இயற்பியில் அறிஞர் பிறந்த தினம் இன்று…

Default Image

இந்திய இயற்பியலாளர் திரு. பஞ்சரத்தினம் அவர்கள், 1934 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தார். இவர், தனது கல்வியை சிறப்பாக கற்றுக்கொண்டு,  தனது, 25ஆவது வயதில் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். மேலும், இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில்  இயற்பியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர், தமது ஆய்வுப் பணிகளைத் தவிர்த்து, ஆசிரியப் பணியிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டிருந்தார். பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை, 1955 ஆம் ஆண்டு கண்டறிந்தார். எனினும்,  இவரது ஆய்வுகள் 1984 ஆம் ஆண்டு வரை உலகளாவிய அளவில்  அறியப்படாமலே இருந்தது. 1984-ஆம் ஆண்டு மைக்கேல் பெரி என்பவர், இதே போன்ற ஒரு வடிவியற்கட்டத்தை குவாண்ட இயங்கியலில் கண்டறிந்து, ராயல் சொசைட்டி எனப்படும் வேந்தியக் குழும பனுவலில் வெளியிட்டிருந்ததன். பின், இந்திய இயற்பியலாளர்களான சி. இராமசேஷன், இராசாராம் நித்தியானந்தா, சைமன், முகுந்தா,] ஜோசப் சாமுவேல், இராஜேந்திர பண்டாரி போன்றோர் ஒளியியலிலல் பஞ்சரத்தினம் அவர்கள் தந்த ஆய்வுகளை உலகம் அறியச் செய்ததோடு அவர்களும் வடிவியற்கட்டத்தில் பெரிய ஆய்வுகளைச் செய்தனர்,  இவரின் ஆய்வுகள் நோபல் பரிசு வாங்கிய  சந்திர சேகர வெங்கட இராமனின் மேற்பார்வையில் பெரும்பாலும் நடைபெற்றன. இராமன் பஞ்சரத்தினத்தின் திறமையினை மிக நன்றாக உணர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இராமன் ஆய்வகத்தைத் தொடர்ந்து, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்த போது, உடல்நலக் குறைவால் தமது 35-ஆவது வயதில், 1969ஆம் ஆண்டு காலமானார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்