ஆஸ்கார் யூடியூப் தளத்தில் சூர்யாவின் ஜெய் பீம் பட காட்சி பதிவேற்றப்பட்டு சாதனை புரிந்துள்ளது.
இயக்குனர் ஞானவேல் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தான் ஜெய்பீம். கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாகிய இந்த படத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பழங்குடியின மக்களுக்காக வாதாடக் கூடிய வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ள இந்தப் படம், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் அமேசான் பிரைமில் வெளியாகி நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களில் முதல் இடத்திலும், ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக புள்ளிகளை பெற்று உலக அளவில் முதலிடத்தையும் பிடித்து ஏற்கனவே சாதனை புரிந்துள்ளது ஜெய் பீம். இந்நிலையில், தற்போதும் ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் படத்தில் உள்ள 12 நிமிட காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் ஜெய்பீம் தான்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…