இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு படத்தில் முதன் முதலாக நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடிகை காஷ்மீரா நடித்துவருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்திற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் இன்னும் சில நாட்களில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விடும். இந்த நிலையில் இந்த படத்தில் முதன் முதலாக நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…