பாகிஸ்தானில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் இந்து பெண்.!

Dr Saveera Parkash h

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் சவீரா பர்காஷ் என்ற இந்துப் பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் இசுலாமிய நாடு என்பதால், பாகிஸ்தான் வரலாற்றில் ஒரு இந்துப் பெண் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த சவீரா பர்காஷின் தந்தை, ஓம் பிரகாஷ், ஓய்வு பெற்ற மருத்துவர். அவர் கடந்த 35 ஆண்டுகளாக கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில், 2022 இல் அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிரகாஷ்,  PPP என்ற பாகிஸ்தான் பீபுள் பார்டி என்ற கட்சியின் மகளிர் பிரிவில் பொதுச் செயலாளராக உள்ளார்.

இவர் டிசம்பர் 23 (வெளக்கிழமை) அன்று வேட்புமனு தாக்கல் செய்ததாக அவர் கூறினார்.அவர் வசித்து வரும் பகுதியில், தன் தந்தை போல் ஏழைகளுக்காகப் வேலைசெய்ய விரும்புவதாக பேட்டியளித்துள்ளார்.

பாரிஸ் விமான நிலையத்தில் 3 நாளாக தவித்த 300 இந்தியர்கள்.? நீதிபதிகள் அதிரடி உத்தரவு.!

குறிப்பாக, அவர் பெண்களின் நல்வாழ்வு, பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். மேலும் அவரைப் பொறுத்தவரை, பெண்கள் தொடர்ந்து குறிப்பாக வளர்ச்சியின் துறையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறார். அதற்கு எதிராக போராடுவதாக கூறுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்