வங்கதேசத்தில் நேற்று இரவு சூறையாடப்பட்ட இந்து கோவில்..!
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இஸ்கான் ராதாகாந்தா கோவில் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஹிந்து அமெரிக்கன் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இஸ்கான் ராதாகாந்தா கோவில் மீது தாக்குதலை நேற்று இரவு 8 மணிக்கு ஹாஜி ஷஃபியுல்லா தலைமையில் 150 பேர் தாக்கி உள்ளனர். கோயில் சிலைகள் பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களைக் கொள்ளையடித்தனர். இந்த தாக்குதலின் போது குறைந்தது 3 இந்து பக்தர்கள் காயமடைந்தனர்” என கூறப்பட்டுள்ளது.
We’re receiving reports that an @iskcon temple in Dhaka, Bangladesh has been attacked by a mob of 150 people, with 3 people injured. Will update with more info as we get it. @StateDept @USCIRF https://t.co/x4jfIahGGt
— Hindu American Foundation (@HinduAmerican) March 17, 2022
கோவில்கள் மீது ஏற்கனவே தாக்குதல்கள் நடந்துள்ளன
வங்கதேசத்தில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, நவராத்திரியின் போது பல கோவில்களும் தாக்கப்பட்டன. இந்த வன்முறையில் 2 இந்துக்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். அப்போதும் டாக்காவில் உள்ள இஸ்கான் கோவில் தாக்கப்பட்டது.
9 ஆண்டுகளில் 4000 தாக்குதல்கள்:
கடந்த 9 ஆண்டுகளில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது சுமார் 4000 தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றில் 1678 மத விஷயங்கள் மட்டுமே.