சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக கருதப்படுவது சுடலைமாடசுவாமி. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சுடலை மாடசுவாமி கும்பிடுபவர்கள் இங்கு அதிகம். பார்வதி பார்வதி அம்மன் ஒரு பெரிய ஆயிரம் தூண் கொண்ட மடத்தில் விளக்கின் வெளிச்சத்தினில் இருந்து பிள்ளையை பெற்றெடுத்தாள். விளக்கின் சுடரில் இருந்து பிறந்ததால் சுடலைமாடன் என பெயரை கொண்டார்.
இவர்க்கு தென் மாவட்டங்களில் பல கோவில்கள் உள்ளன. ஆறுமுகமங்கலம் பகுதியில் சின்னான் என்கிற ஒரு நபர் வாழ்ந்துவந்தார். இவருக்கு பெற்றோர்கள் யாரும் கிடையாது. அப்பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். அவர் ஒரு நாள் மாடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது. ஒரு அப்பாவியை இரண்டு நபர்கள் அரிவாளால் துரத்திக்கொண்டு வந்தனர்.
அப்போது ஒரு சுடலைமாடசுவாமி கோவில் அருகே அந்த இரு நபர்கள் ஒரு அப்பாவியை வெட்ட முயன்றனர். அதற்கு அந்த அப்பாவி மனிதர் தன்னை வெட்ட வேண்டாம் என கெஞ்சி பார்த்தார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. என்னை வெட்டினால் இந்த சுடலைமாடசுவாமி வந்து உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் உங்களை தண்டிக்கும் என கூறினார். ஆனால், அதனை கேட்காமல் அந்த அப்பாவியை வெட்டி வீசிவிட்டு அந்த இரு நபர்களும் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தை சின்னான் நேரில் பார்த்து கொண்டிருந்தார். ஆனால் அந்த இரண்டு நபர்களையும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி போனால் தன்னையும் வெட்டி விடுவார்கள் என பயந்து ஒளிந்து கொண்டார்.
பின்னர், அந்த ஊர் மக்களிடமும் வெட்டுப்பட்ட இறந்து போன அந்த நபரின் மனைவியிடமும் சென்று நடந்ததை குறிப்பிட்டார். வெட்டுப்பட்டு இறந்தவரின் மனைவி தன் கணவன் இறந்த துக்கம் தாளாமல் கதறி அழுதார். இதனை பார்த்த சின்னான், கொலை செய்த இருவரையும் நான் நேரில் பார்த்தேன். எங்குவேண்டுமானாலும் சாட்சி கூறுகிறேன். என கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றத்தில் சின்னான் தங்களுக்கு எதிராக சாட்சி கூறினால் தங்களுக்கு தண்டனை உறுதி என்பதை உணர்ந்த அந்த இரண்டு பேர் சின்னானை மிரட்டினார். ஆனால், சின்னான் பயப்படவில்லை. உடனே சாட்சி கூற வேண்டிய நாளன்று சின்னானை ஒரு மண்டபத்தில் கட்டிவைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
நீதிமன்றத்தில் சின்னான் பெயர் வாசிக்கப்பட்டது. சின்னனாக சுடலைமாடசாமியே வந்து கொலையாளிகளுக்கு எதிராக சாட்சி கூறிவிட்டு சென்றுவிட்டார். கொலை செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் தங்கள் கட்டிவைத்த மண்டபத்தில் போய் சென்று பார்த்தனர். அங்கு கட்டி வைக்கப்பட்டபடியே சின்னான் இருந்தான். இதனை கண்டு ஊர் மக்களும் அந்த கொலைகார கும்பலும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
பின்னர் தான் அவர்களுக்கு தெரியவந்தது அன்று அந்த அப்பாவி சொன்னதுபோல் சுடலைமாடன் நேரில் வந்து சாட்சி சொல்லி கொலையாளிகளுக்கு தண்டனை கொடுத்து விட்டான் என அவர்களுக்கு புரிந்தது. அதன்பின்னர்தான் அப்பகுதியிலுள்ள சுடலைமாடன் கோவில் சுவாமி ஐகோர்ட் மகாராஜா எனும் பெயரால் அழைக்கப்பட தொடங்கினார். அப்போதிலிருந்து இப்போது வரை ஹை கோர்ட் மஹாராஜா என பொதுமக்கள் அழைக்கப்பட்டு பூஜை பரிவாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…