பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி தடை…!
பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், கடந்த 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மேலும் ரூ.258 கோடியில் 2.02கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதோடு அதனோடு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இன்று பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும்.பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க வேண்டியதன் நோக்கம் என்ன? என்றும் பொங்கல் பரிசாக வழங்கப்படும் ரூ.1000 கட்சிப் பணம் அல்ல, அரசுப் பணம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவால் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 கிடைக்காது.