குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் சுரேந்திரன் மனைவி புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு.
கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த புகாரில் கைது செய்யப்பட்ட சுரேந்திரன், செந்தில்வாகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இவர்களின் சுரேந்தனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்த செய்ய கோரி சுரேந்தரின் மனைவி கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவக்கூடிய மூடநம்பிக்கைகள் மற்றும் கல்வியறிவு இல்லை, அறியாமையை ஒழிப்பதற்காவும் பல்வேறு தகவல்களை வெளியிட்ட தனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதாகவும், அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று மனுவில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்திருக்கக்கூடிய நிலையில், குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனுவானது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கும், சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு விசாணையை தள்ளி வைத்தனர்.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…