கறுப்பர் கூட்டம் : மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு.!

Default Image

குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் சுரேந்திரன் மனைவி புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு.

கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த புகாரில் கைது செய்யப்பட்ட சுரேந்திரன், செந்தில்வாகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இவர்களின் சுரேந்தனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்த செய்ய கோரி சுரேந்தரின் மனைவி கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவக்கூடிய மூடநம்பிக்கைகள் மற்றும் கல்வியறிவு இல்லை,  அறியாமையை ஒழிப்பதற்காவும் பல்வேறு தகவல்களை வெளியிட்ட தனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதாகவும், அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று மனுவில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்திருக்கக்கூடிய நிலையில், குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவானது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கும், சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு விசாணையை தள்ளி வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்