ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்திலுள்ள டைட்டில் டிராக் பாடல் டிக்டாக்கில் 100மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
தாராள பிரபு படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக் மற்றும் தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை ஸ்கிரீன் ஸீன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. கருவுறாமை கிளினிக்கிற்கு விந்து தானம் செய்யும் ஒரு பையனின் கதை தான் தாராள பிரபு . அனிருத் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் ஒரிரு நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. அதனையடுத்து கொரோனா காரணமாக இந்த படத்தை அமேசான் பிரேமில் பலர் கண்டு ரசித்தனர்.
இந்த படத்திலுள்ள டைட்டில் டிராக் பாடலான ‘ஏய் பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பெரிய அளவில் டிரெண்டானது. இந்த நிலையில் தற்போது இந்த பாடல் யூடுபில் 10 மில்லியன் க்கு மேல் பார்வையாளர்களை பெற்றதோடு, டிக்டாக்கில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மாஸ்ஸான சாதனையை படைத்துள்ளது. விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடலை அனிருத் அவர்கள் பாடி இசையமைத்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…