ஹாலிவுட் அளவிற்கு அசத்தல் விளம்பரம் செய்து வரும் ஹீரோ படக்குழு!
- சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ.
- பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அர்ஜுன் அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் டிசம்பர் 20ம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதன்காரணமாக தற்போது இப்பட பிரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இயங்கிவருகிறது. அதன்படி சென்னையில் ஒரு பெரிய கட்டிடத்தில் ஹீரோ படத்தின் முத்திரை தெரியும்படி லேசர் லைட் வசதி செய்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல ஹாலிவுட் படமான பேட்மேன் படத்திற்கும் இதே விளம்பர யுக்தி கையாளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போக ஒரு ரயிலிலும் இப்பட போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.