ஹீரோவாக வாகனம் ஓட்ட இனிதே வரப்போகிறது ஹீரோ எலக்ட்ரிக் பைக்… கசிந்தது தகவல்கள்.. முரட்டுத் தோற்றத்தில் வண்டி…

Published by
Kaliraj
  • ஹீரோ பிரீமியம் ரக எலக்ட்ரிக் வாகனம் இந்தாண்டு வர இருக்கிறது.
  • இது குறித்த சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக.
    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. எனினும், ஹீரோ நிறுவனம் இதுவரை என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் குறித்த  படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய  எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில்  அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி இந்த ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள்  பிரீமியம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில்  களமிறங்கி களக்க  இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய எலெக்ட்ரிக் AE 47 மோட்டார்சைக்கிள் 150 முதல் 200 சிசி பிரிவு வாகன வரிசையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் கூறப்படுகிறது. இதன் வடிவமைப்பை பொருத்தவரை இந்த புதிய மோட்டார்சைக்கிள் கம்பீரமான  தோற்றம் பெற்றிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இதன் சிறப்பம்சங்களான,
  • முன்புறம் அப்சைட்-டவுன் ஃபோர்க் வழங்கப்படுகிறது.
  • இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
  • இதன் பவர்டிரெயின் மற்றும்
  • பேட்டரி பேக் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்க வில்லை.
  • இது மணிக்கு அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும்
  • இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை தொடர்ந்து  பயணிக்க முடியும் என்றும்  கூறப்படுகிறது.
  • மேலும் இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும்
  • ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற வசதிகளும்  வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவிவருகிறது.
  • இதன் விலை 1.25 – 1.50 இலட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by
Kaliraj

Recent Posts

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

43 minutes ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

2 hours ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

2 hours ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

2 hours ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

3 hours ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

3 hours ago