பாகுபலி படத்திற்கு இணையாக பட விளம்பரத்தில் களமிறங்கிய ஹீரோ படக்குழு!

Default Image

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளர். இப்படம் அடுத்த மாதம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தினை விளம்பர படுத்தும் வேளைகளில் தீவிரமாக யோசித்து வருகிறது. அதன் படி தற்போது ஹீரோ படத்தினை ப்ரொமோட் செய்ய புது ஆண்ட்ராய்டு கேம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதனை நாளை மாலை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
இதே போல தான் பாகுபலி எனும் பிரமாண்ட படத்தை விளம்பரப்படுத்த அந்த படக்குழு பாகுபலி பட ஆண்டிராய்டு கேமை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளர். அர்ஜுன், அபி தியோல், இவனா என பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்