மிரட்டலாக வெளியான “A” படத்தின் டிரைலர் இதோ.!
தெலுங்கில் திரில்லர் படமாக உருவாகும் “A” படத்தின் டிரைலர் சந்தோஷ் சிவனால் வெளியிடப்பட்டது.
அவந்திகா புரொடக்ஷன் வழங்கி கீதா மின்சாலா தயாரிக்கும் தெலுங்கு படம் “A” (AD INFINITUM). இந்த படத்தை உகந்தர் முனி இயக்குகிறார். இந்த படத்தில் நிதின் பிரசன்னா, ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரவீன் கே. பங்கரி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஜய் குரகுலா இசையமைத்துள்ளார். சமீபத்தில் திரில்லர் கலந்த இந்த படத்தின் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் அவர்களால் வெளியிடப்பட்டது. திரில்லர் கலந்து மிரட்டலுடன் வெளியான “A” படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.