மகா சிவராத்திரி பூஜையை வீட்டில் எப்படி செய்வது பற்றி பார்க்கலாம்.!
மகா சிவராத்திரி அன்று வீட்டிலேயே எப்படி நம்ம பூஜை செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். ஈசன் உங்கள் பூஜைகளில் இருக்கும் ஆடம்பரங்களை கவனிப்பது இல்லை. நம்முடைய மனத் தூய்மையையும் , அர்ப்பணிப்பையும் தான் விரும்புகிறார். இந்த சிவராத்திரி தினத்தில் கண்களும் , உள்ளமும் ஒரு சேர விழித்திருந்து ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.
நம்ம வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே இரவு முழுக்க கண்விழித்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம். அன்று முழுவதும் உபவாசமிருந்து பூஜை துவங்கவேண்டும். மாலை ,இரவு, நள்ளிரவு மற்றும் அதிகாலை என்று சாம பூஜை காலங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி , தீபாராதனை காட்ட வேண்டும்.
இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து “நாம ஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லலாம்.தேவாரம் ,திருவாசகம் சிவபுராணம் ஆகியவற்றை நம்ம படிப்பது அல்லது யாராவது படிக்கச் சொல்லிக் கேட்கலாம். இதுதான் வீட்டிலேயே நம்ம சிவராத்திரி பூஜை செய்யும் முறை.