OTT-யில் வெளியாகும் வலிமை..! வெறித்தனமான டிரைலர் இதோ..!!
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 25-நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இத்திரைப்படம் வருகின்ற 25-ஆம் தேதி ZEE5ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
Super new trailer cut???? action-packed #Valimai https://t.co/PeCnueF6RZ#ValimaiOnZEE5 pic.twitter.com/n1paCdWvWB
— Kaushik LM (@LMKMovieManiac) March 22, 2022
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். கார்த்திகேயா, சுமித்ரா, சைத்திரா ரெட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார்.